1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (14:06 IST)

லால் சலாம் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!

ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துக்கு லால் சலாம் மற்றும் ஞானவேல் இயக்கும் புதுபடம் என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் சம்மந்தமான சில காட்சிகள் மும்பையில் சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலையில் முதல்கட்ட ஷூட்டிங் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் தன்னுடைய காட்சிகளில் நடித்து முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னுடைய மனைவியோடு கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.