வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (12:06 IST)

சர்கார்களுக்கு செக் வைக்கும் விஜய்சேதுபதி! அரசியல்வாதியாகிறாரா?

நடிகர் விஜய்சேதுபதி அரசியல்வாதி படத்தில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 


 
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிகர் எந்தையும் தாண்டி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பவர். அந்தவையில் , காவிரி மேலாண்மை வாரியம், ஜல்லிக்கட்டுபோன்ற பிரச்னைகளில் தன்னுடைய கருத்துக்களை கூறியவர் நடிகர் விஜய் சேதுபதி.
 
அந்தவகையில் தற்போது அரசியலை மையமாக கொண்டு உருவாகும் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி,பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படத்தில் உருகவைக்கும் காதல் படத்தில் நடித்து நம் அனைவர் மனங்களையும் கொள்ளைகொண்ட விஜய்சேதுபதி பிறகு சீதக்காதி படத்தில் நடித்தார் ஆனால் அது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை 
 
இந்நிலையில் தற்போது இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் "துக்ளக்" எனும் படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க மாஸ் படம் என்று கூறியுள்ளனர். 
 
புதுமுக இயக்குனரான டில்லி பிரசாத் இயக்கும் இந்தப் படத்துக்கு, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' மற்றும் 'சீதக்காதி' படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன், வசனம் எழுதுகிறார்.  'துக்ளக்' படம், முழு நீள அரசியல் படமாம் . அதனால், படத்தில், தெறிக்க விடும் அரசியல் வசனங்கள் நிறைய இடம் பெறப்போகிறதாம். 
 
இதை பற்றி படத்தின் இயக்குனர் கூறியதாவது,  “சமீபத்தில் படத்தின் கதையுடன் விஜய் சேதுபதியை சந்தித்தேன். இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். ஃபேண்டசி அம்சங்களுடன் முழு அரசியல் படமாக இது இருக்கும். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும்.
 
விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்துக்கு சில ஃபேண்டசி அம்சங்கள் இருக்கும். மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜூன் மாதம் முதல் சென்னையில் படத்திக்கான படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்