நடிகர் விஜய்யின் இளம் வயது புகைப்படம் இணையதளதில் வைரல் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் ஏப்ரலில் ரிலீசாக வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அடுத்த வருடம் பொங்கல் பண்டிக்கைக்கு ரிலீஸாகும் என தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயதில் அவரது தாயுடன் தாஜுமஹால் சுற்றிப் பார்க்கச் சென்று அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.