புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 ஜூன் 2021 (23:28 IST)

நடிகர் விஜய் பிறந்தநாளில்…’’அண்ணே வேற மாறி’’ பாடல்!

தமிழ் சினிமாவில் 47 திரைநட்சத்திரங்கள் இணைந்து நடிகர் விஜய் –ன் பிறந்த நாளுக்கான ஒரு பாடல் தயாரித்துள்ளனர்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 47 வது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான அவரது ரசிகர்கள் ஒருவாரத்திற்கு முன்பிருந்து சமூக வலைதளத்தைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.

குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளின்போது, விஜய்க்கான Common Dp ஐ ரசிகர்கள் தயாரித்து வருகின்றனர். இந்தக் common dp ஐ பாடலாசிரியர் விவேக் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தின் விஜய் – பூஜா ஹெக்டே நடித்துவரும் ‘விஜய்65’ பட புதிய அப்டேட் வெளியாகும் எனில் இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கி நிச்சயம் சமூகவலைதளங்கில் ஒரு சாதனை நிகழ்த்தப்படும் என தெரிகிறது.

விஜய் ரசிகர் ஒருவரின் கைவண்ணத்தின் உருவாகியுள்ள விஜயின் coomon dp நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்நிலையில்,   விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருக்கு வித்தியாசமாகப் பரிசளிக்க நினைத்த தமிழ் திரைநட்சத்திரங்கள் சுமார் 47 பேர் இணைந்து ஒரு பாடல் தயாரித்துள்ளனர். இப்பாடலை வரும்  ஜூன் 22 ஆம் தேதி சமூக வலைதளத்தில் வெளியிடவுள்ளனர். இப்பாடலுக்கான தலைப்பு அண்ணா வேற மாறி எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இப்பாடலும் சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள்