செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (10:38 IST)

கமல்ஹாசனின் அரசியல் மீது மரியாதை உள்ளது – நடிகர் சூர்யா பதில்!

நடிகர் சூர்யா அளித்த நேர்காணல் ஒன்றில் மூத்த நடிகர் கமல்ஹாசனின் அரசியல் மீது மரியாதை உன்டு எனக் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது சூரரைப் போற்று திரைபடத்தின் ரிலீஸை முன்னிட்டு ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதன் ஒரு கட்டமாக விமர்சகர் ராஜீவ் மசந்த்க்கு அளித்த நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது கமல்ஹாசனின்அரசியல் நிலைப்பாடு பற்றி கேட்டபோது ‘அவரின் அரசியல் மீது மரியாதை உள்ளது. மேலும் என்னால் முடிந்த நல்ல காரியங்களை செய்து வருகிறேன்’ எனக் கூறியுள்ளார்.