வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:28 IST)

அந்த நடிகையோடு ரொமான்ஸே வேண்டாம்… கையெடுத்துக் கும்பிட்ட சூர்யா!

சூர்யா நடித்துள்ள ஸ்ரீ படத்தில் நடித்த ஸ்ருதிகா நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா நடித்த படங்களில் பெரிதாக வரவேற்பைப் பெறாத படங்களில் ஒன்று ஸ்ரீ. அந்த படத்தில் இப்போதும் கவனம் பெறுவது என்றால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளாகும். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா.

இவர் அதன் பின்னர் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘அப்போது எனக்கு 14 வயதுதான் ஆனது. அதனால் எனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பே வரவில்லை. அதனால் சூர்யா அந்த படத்தில் என்னோடு ரொமான்ஸ் காட்சிகளே வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்’ எனக் கூறியுள்ளார்.