1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (15:30 IST)

ஓய்வுக்காக மும்பை செல்லும் நடிகர் சூர்யா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது  ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேசன்ஸ் தயாரிப்பில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில், சென்னையில் இப்பட சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவின் தோளில் கயிறு பட்டதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது.
 
இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சூர்யா சமீபத்தில் வலைதள பக்கத்தில்  ‘'உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போது நன்றியுடன் இருக்கிறேன்…. விரைவில் குணமடையுங்கள் என்ற உங்களின் மெசேஜ்களுக்கு நன்றி, நான் நன்றாக உணர்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், சூர்யா விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் இன்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது,
 
இந்த நிலையில் நடிகர் சூர்யா, காயத்தில் இருந்து  குணமடைய வேண்டியும், ஓய்வெடுப்பதற்காக அவர் குடும்பத்தினருடன் மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
விரைவில் சூர்யா குணமடைந்தபின், கங்குவா படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் மற்றும் அப்டேட் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.