புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 மே 2022 (17:30 IST)

''சிக்ஸ்பேக் ''லுக்கில் நடிகர் சூரி...வைரல் புகைப்படம்

actor soori
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடியின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

அதன் பின், ஜில்லா, சாமி -2 ,அண்ணாத்த, டான் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து முன்னணி காமெடி நடிகரானார்.

இந்த நிலையில், தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள படம் விடுதலை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சூரி போலீஸாக நடித்துள்ளதால் தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுடலாக வைத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்றைய வலி நாளைய வெற்றி எனப் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.