செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (18:46 IST)

லாக்டவுனில் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய நடிகர் சூரி!

தமிழ் சினிமாவின் காமெடிய நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார். சூரி வளர்ந்து வந்த நேரத்தில் டாப் காமெடி நடிகராக பார்க்கப்பட்ட சந்தானத்தையே கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது உள்ளிட்டவரை தாண்டி வேலை இழந்து திண்டாடி வந்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவிகளை செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நடிகர் சூரி ஆன்லைன் வகுப்புகள் எடுத்துள்ளார். அரசு பள்ளி சார்பில் மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்  ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற தலைப்பில் கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என அனைத்தையும் பகிர்ந்து குழந்தைகளின் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.