தேசிய விருதுடன் முதல்வரை சந்தித்த நடிகர் பார்த்திபன்!
நடிகர் பார்த்திபன் தான் பெற்ற தேசிய விருதோடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தபோது கோலிவுட் திரையுலகமே பார்த்திபனை பாராட்டி தள்ளியது ஞாபகம் இருக்கலாம்.
இந்த படத்திற்கு நடுவர்கள் வழங்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள நடிகர் பார்த்திபன் இந்த படத்துக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் இது. இந்த படத்தில் எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உண்டு. எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் பெற்ற விருதோடு தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து அவரிடம் வாழ்த்தைப் பெற்றுள்ளார்.