வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:33 IST)

குட்டி ஏஞ்சலுடன் கியூட் டான்ஸ் போட்ட பிக்பாஸ் கணேஷ் - வீடியோ!

கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', 'கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் .

தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு சமைரா என்ற அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் குடும்பத்துடன் அழகிய நேரத்தை செலவிட்டு வருகிறார் கணேஷ்.

அந்தவகையில் தற்போது தனது மகள் சமைராவுடன் ரெட்ரோ பாலிவுட் பாடலுக்கு கியூட் டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு  ''அவள் மிகவும் அழகாக இருக்கிறாள் ... ஒரு மகள் இருப்பது எப்போதும் ஒரு ஆசீர்வாதம் தான் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரும் வெகுவாக ஈர்த்துள்ளது.