1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (15:24 IST)

சின்ன பையன் மாதிரி ஜாலியா டான்ஸ் ஆடும் தனுஷ் - வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வரும் தனுஷ் கடந்த 2002ம் ஆண்டு வெளிவந்த "துள்ளுவதோ இளமை"  படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதைகண்டேன், திருவிளையாடல், புதுப்பேட்டை , ஆடுகளம், 3 , மாரி, வேலையில்லா பட்டதாரி என பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றார். 
 
இப்படி சினிமா உலகில் நடிகராக மட்டும் சிறந்து விளங்காமல்  தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்து விளங்கி வருகிறார். இவர் கடந்த 2004ம் ஆண்டு சூப்பர் ரஜினிகாந்தின் முத்த மகள்  ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு யாத்ரா,  லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 
 
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் D43 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . கவலைகளை மறந்து தனுஷ் ஜாலியாக நடனமாடும் இந்த வீடியோ ரசிகர்களின் பார்வையை திசை திருப்பியிருக்கிறது.