நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் மகன் செய்த சாதனை! யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி!
பிரபல நகைச்சுவை நடிகரான சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்தின் மகன் ஸுரூஜன் இந்திய அளவில் 75 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால் இது அவரது முதல் முயற்சியாகும்.