சனி, 21 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (16:01 IST)

விஷாலுடன் நீண்ட இடைவெளிக்கு பின் மல்லுக்கட்டும் அஜித் பட நடிகர்!

சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் நடிகர் பாபுராஜ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இதில் விஷாலுடன் டிம்பிள் ஹயாத்தி, யோகி பாபு மற்றும் ரவினா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் அஜித்தோடு ஜனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.