சம்பளத்தில் ரஜினி விஜய்யை தாண்டிய நடிகர் – கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!
தென் இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இன்று வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தும், தமிழக அளவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய்யுமே தென்னிந்திய சினிமாக்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவர் கூட இன்னும் 100 கோடி சம்பளத்தை எட்டவில்லை. ஆனால் பாகுபலி மூலமாக பேன் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் இப்போது 100 கோடி சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சம்பளத்துக்காக ஜி எஸ் டி தொகையையும் தயாரிப்பாளரே கட்டவேண்டும் என்றும் சொல்கிறாராம்.
ஆனால் பாகுபலிக்கு பின்னர் அவர் நடித்த சாஹோ திரைப்படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.