நடிகர் அஜித்குமார், ஷாலினி சமீபத்திய புகைப்படம் வைரல்!
இந்திய சினிமாவில் தனித்துவ நடிகர் மற்றும் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அஜித்குமார்.
அமராவதி, ஆசை, அமர்களம்,அட்டகாசம், வில்லன்,வரலாறு, விஸ்வாசம், வீரம்,வலிமை என தன் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுப்பவர் அஜித்குமார்.
தற்போது அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தின் அப்டேட் மிக விரைவில் இப்படத்தின் தயாரிப்பாளர் போன்கபூர் கொடுக்கவுள்ளார். இதற்காக அவர் சென்னை வரவுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அஜித் சமீபத்தில் சென்னையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீடியோ வைரலான நிலையில், இன்று அஜித் மற்றும் அவரது காதல் மனைவி ஷாலினி இருவரும் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது