ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!
நடிகர் அர்ஜுனின் தீவிர ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், அவரது புதிய படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனின் அசோசியேட் இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் ஒரு கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருடைய ரசிகர்களுக்கு சற்றும் சலிப்பு ஏற்படாத வகையில், இப்படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அடிப்படையில் அப்பா-மகள் சென்டிமென்ட் கதையாக இருந்தாலும், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுனின் புகழ்பெற்ற சண்டைக் காட்சிகளைக் காண ரசிகர்கள் தயாராகலாம். காரணம், இந்தப் படத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு சண்டைக் காட்சிகள் இடம்பெற உள்ளதாம்.
அர்ஜுனின் முந்தைய அதிரடி திரைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில், அவருடைய பழைய 'ஆக்சன் கிங்' அவதாரம் இப்படத்தில் வெளிப்படும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
Edited by Siva