சின்னத்திரையில் களம் இறங்கிய இயக்குனர் & நடிகர் பாக்யராஜ்… எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் 80 களில் கோலோச்சியவர் பாக்யராஜ்.
பாக்யராஜ் இயக்கி நடித்த பல படங்கள் வெள்ளி விழா படங்களாக அமைந்தன. அவரின் முந்தானை முடிச்சு, தூரல் நின்னு போச்சு மற்றும் தாவனி கனவுகள் போன்ற படங்களில் 18+ விஷயங்கள் இருந்தாலும், அதை யாரும் முகம் சுளிக்காத வண்ணம் பெண்களும் ரசிக்கும் வண்ணம் உருவாக்கி இருப்பார், அதனால் அவர் படங்களுக்கு பெண் ரசிகர்களின் வரவேற்பு அதிக அளவில் இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் படங்கள் பெரிய அளவுக்கு கவனம் பெறாததால் குணச்சித்திர வேடங்களில் களமிறங்கினார். இப்போது அவர் சின்னத்திரை சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். ஏற்கனவே சித்தி 2 சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பாக்யராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 எனும் சீரியலில் நீதிபதி வேடத்தில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த எபிசோட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.