திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 10 பிப்ரவரி 2020 (18:31 IST)

ஆலியா ஆலியா.... "டகால்டி" படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ் !

காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. 
 
அந்த லிஸ்டில் சந்தானம் விஜய் ஆனந்த் டகால்டி இயக்கத்தில் ஹீரோவாக நடித்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி வெளியான படம் டகால்டி. இப்படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். ந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 
 
படம் வெளியாகி ஓரளவிற்கு ஓடிய நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலியா ஆலியா என்ற வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. பப்பில் நடன அழகிகளுடன் சேர்ந்து சந்தோஷ நடனமாடுகிறார் சந்தானம்.