திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2025 (14:50 IST)

இளையராஜா வந்தபின்னர்தான் இசைக் கலைஞர்களுக்கு மரியாதை உருவானது… ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவின், ஏன் இந்திய சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர்  ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். உலகில் சினிமா தயாரிக்கும் பல மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் மனைவி சாய்ரா பானு திடீரென ஏ ஆர் ரஹ்மானைப் பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ ஆர் ரஹ்மானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்மந்தமானப் பல விதமான வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் சாய்ரா பானு “உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவர் ரஹ்மான். எங்கள் விவாகரத்து சம்மந்தமாக அவர் மீது அவதூறு பரப்புவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது” எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரஹ்மான் மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் மூத்த இசையமைப்பாளரான இளையராஜா குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இசைக் கருவிகள் வாசிக்கும்போது, எல்லா இசைக் கலைஞர்களும் வேட்டியவிழ்ந்து விழும் வரை குடிப்பார்கள். ஆனால் இளையராஜா வந்த பின்னர்தான் ஒழுக்கம் அவர்களுக்கு மத்தியில் உருவானது. அதன் பின்னர்தான் நான் இசைக் கலைஞன் என்றும் நான் அவருக்கு வாசிக்கிறேன் என்று சொல்லும்போது மதிக்க ஆரம்பித்தார்கள். அவரின் இசை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தவிஷயம் என்னை மிகவும் கவர்ந்தது” எனக் கூறியுள்ளார்.