பாபா படத்துக்காக மீண்டும் இசையமைப்புப் பணிகளில் இசைப்புயல் ரஹ்மான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது டிசம்பர் 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளில் பாபா படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் படத்தில் அப்போதைய அரசியலை பிரதிபலிக்கும் சில காட்சிகள் இடம்பெற்றன. மேலும் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அதையெல்லாம் இப்போது நீக்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் ரஜினி 7 மந்திரங்களை பயன்படுத்துவார். அதில் இரண்டு மந்திரங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் சில இடங்களில் படத்துக்கான இசையமைப்புப் பணிகளை மேம்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது ரஜினியுடன் ரஹ்மான் இசையமைப்பு பணிகளை மேற்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.