சாய்ரா பானு எவ்வளவு ஜீவனாம்சம் கேட்கப் போகிறார்… வழக்கறிஞர் சொன்ன பதில்!
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக கருதப்படுபவர் ஏ ஆஎ ரஹ்மான். உலகளவில் புகழ்பெற்ற இவர் 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டு வருகிறார். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானை விவாகரத்து செய்யவுள்ளதாக அறிவித்தார். அதில் “தங்களுக்குள் நிரப்ப முடியாத இடைவெளி விழுந்துவிட்டதாக” அவர் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவாகரத்து முடிவை ஏ ஆர் ரஹ்மானும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சாய்ரா பானுவின் வழக்கறிஞரான வந்தனா ராய் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சாய்ரா பானு ஏ ஆர் ரஹ்மானிடம் எவ்வளவு ஜீவனாம்சம் கேட்டுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “அதுகுறித்த விவரங்களை இருவரும் இதுவரைப் பேசிக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார். சுமார் 2000 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள ரஹ்மானிடம் சாய்ரா பானு ஐம்பது சதவீதம் அளவுக்கு ஜீவனாம்சமாகக் கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.