1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (09:37 IST)

20 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகிறதா ‘கஜினி 2’?.. ஏ ஆர் முருகதாஸ், சூர்யா பேச்சுவார்த்தை!

நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் முதலில் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் அதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா காம்பினேஷனில் இந்த படம் உருவானது. படம் வெளியான போது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக சூர்யா, அசின் ஜோடியின் காதல் காட்சிகளும் படத்தின் பாடல்களும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

கஜினி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முதல் முதலில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற சாதனையை கஜினி நிகழ்த்தியது. இதையடுத்து கஜினி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஏ ஆர் முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அது சம்மந்தமாக தற்போது அவர் சூர்யா தரப்பில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.