செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (15:02 IST)

பாடகர் கே.கே மரணம் குறித்து சிபிஐ விசாரணை: கொல்கத்தா ஐகோர்ட்டில் மனுதாக்கல்

singer kk
பாடகர் கே கே மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டில் நாளை பொதுநல மனு தாக்கல் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
பாடகர் கேகே சமீபத்தில் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றாலும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்
 
இந்த நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நாளை இதுகுறித்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.