1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (21:57 IST)

''தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான்''.- இயக்குனர் சீனுராமசாமி டுவீட்

Modi
பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று இயக்குனர் சீனு ராமசாமி டுவீட் பதிவிட்டுள்ளார்.

 
பிரதமர் மோடியின் தாயார் இன்று மதியம்  திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமரின்  தயார்அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று, கண்ணேகலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தன் டிவிட்டர் பக்கத்தில்,

 ‘’இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு.

பாசத்தில்
நிகரற்றது.

எந்நேரமும் தாயின் கவலை
பிள்ளையின்
உணவு பற்றியது
தான்.

மாண்புமிகு
பிரதமரின் தாயார்  ஹீராபென் மோடி அவர்கள்
விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.