திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (15:47 IST)

காங்கிரஸ், பாஜகனா ஓகே..! அதிமுகவுக்கு நோ சான்ஸ்! – டிடிவி தினகரன் ஓபன் டாக்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு அமமுக டிடிவி தினகரன், அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதிருந்தே அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமமுக கட்சியிலிருந்து சிலர் அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “அமமுகவில் இருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அதிமுகவிற்கு சிலர் சென்றுள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அமமுக வீரர்கள் பட்டாளம். தொண்டர்களால் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி.

கடந்த தேர்தல்களில் பின்னடைவை சந்தித்திருந்தாலும் தொடர்ந்து கட்சி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அதிமுகவுடன் இணைவீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுடைய பலமும் உயரமும் எங்களுக்கு தெரியும். இரு தேசிய கட்சியில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதே எங்கள் நிலைபாடு. இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K