வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 13 ஜூன் 2019 (17:54 IST)

சூர்யா படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர் இவர்தான்

பிரபல நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படத்தில், முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் “என்.ஜி.கே”. அந்த திரைப்படத்தை இயக்கியவர் செல்வராகவன்.

செல்வராகவனும் சூர்யாவும் இணைந்து பணியாற்றிய திரைப்படம் என்பதால் என்.ஜி.கே திரைப்படத்திற்கு, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு சரியாக போகவில்லை. இதனையடுத்து தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் ”சூரரை போற்று” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் “சூரரை போற்று” திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் பாபு இணையவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோகன் பாபு தெலுங்கு சினிமா உலகில் 1970-களிலிருந்து பல வெற்றி படங்களில் நடித்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.