ஷாருக்கான், அஜய் தேவ்கனுக்கு 5 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய சிறுமி… ஏன் தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் சில பான் மசாலா விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.
புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்தியாவில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும் பான் உள்ளிட்ட சில பொருட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுமாதிரியான பான் மசாலாக்களின் விளம்பரங்களில் பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி தட்கன் அவர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என அவர்களுக்கு 5 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் தனக்கு பிடித்த நடிகர்களான இவர்கள் அந்த விளம்பரங்களில் நடிப்பது பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.