பிரபல நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை; அதிர்ச்சியில் நடிகர்
சினிமா பிரபலங்களுக்கு எப்படி எந்த விதத்தில் பிரச்சனைகள் வரும் என்றே கூற முடியாது. அவர்கள் எப்போதும் ரசிகர்களிடம் இருந்து தப்பவே முடியாது, பிரபலங்கள் எங்கு சென்றாலும் அங்கு ஒரு கூட்டம் வந்துவிடும்.
தற்போது பாலிவுட்டின் வலர்ந்து வரும் இளம் நாயகன் வருண் தவானுக்கு ஒரு ரசிகை தற்கொலை மிரட்டல் கொடுத்துள்ளார். வாட்ஸ் ஆப்பில் ஒரு ரசிகை ஏகப்பட்ட மெசேஜ் செய்து தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் வருண் தவான் அந்த எண்ணை பிளாக் செய்திருக்கிறார். இதனால் உடனே அந்த எண்ணை பிளாக் செய்த பிறகு அந்த ரசிகையின் சார்பில் ஒருவர் வருணுக்கு போன் செய்து, நீங்கள் பதில் மெசேஜ் அனுப்பாவிட்டால் அந்த ரசிகை தற்கொலை செய்து கொள்வார் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனால் வருண் தவான் உடனே பந்த்ரா சைபர் செல்லில் புகார் அளித்ததோடு சான்டாக்ரூஸ் காவல் நிலையத்திலும் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார்.