செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (14:13 IST)

டிசம்பர் 15-ல் தமிழ் சினிமாவில் 8 படங்கள் ரிலீஸ்!

ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களில் சில நல்ல படங்கள் ரிலீஸாகி வருகின்றன. டிசம்பர் மாதத்தில் பார்க்கிங், நாடு என சில நல்ல படங்கள் ஏற்கனவே ரிலீஸாகியுள்ள நிலையில் அடுத்த வாரம் டிசம்பர் 15 ஆம் தேதி 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸாக உள்ளன.

விஜயகுமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ‘ஆலம்பனா’ என்ற படமும், அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’  என்ற படமும் ரிலீஸ் ஆகின்றன. இது தவிர கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள ‘கண்ணகி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவுள்ளன. இதுதவிர பெரியளவில் வெளியே தெரியாத ’ தீதும் சூதும்’ ‘அகோரி’ , ‘பாட்டி சொல்லை தட்டாதே ’, ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’ உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

இந்த ஆண்டில் ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.