42 வயது அஜித், விஜய் பட நாயகிக்கு பிறந்த குழந்தை: வைரலாகும் புகைப்படம்

42 வயது அஜித், விஜய் பட நாயகிக்கு பிறந்த குழந்தை
Last Modified ஞாயிறு, 17 மே 2020 (19:29 IST)
42 வயது அஜித், விஜய் பட நாயகிக்கு பிறந்த குழந்தை
கடந்த 1993ஆம் ஆண்டு அஜித், ’அமராவதி’ என்ற திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார் என்பது தெரிந்ததே. அதே ‘அமராவதி’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. அஜித்துடன் அந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்த அவர் விஜய்யுடன் தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ’ரசிகன்’ ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ மற்றும் ’விஷ்ணு’ ஆகிய இந்த படங்கள் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது மேலும் விஜய்யும் இராசியான நாயகி என்றும் சங்கவி போற்றப்பட்டார்

ஆனால் அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சங்கவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றார்

42 வயதில் குழந்தை பெற்ற நடிகை சங்கவிக்கு கோலிவுட் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இருப்பினும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்தார். தற்போது அவர் தனது குழந்தை புகைப்படத்தை சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :