"மாஸ்டர்" இயக்குனர் கொடுத்த ருசிகர அப்டேட் - தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்!

Papiksha Joseph| Last Modified சனி, 16 மே 2020 (13:31 IST)

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியதாக பதிவிட்டுள்ளார். இந்த ருசிகர அப்டேட்டினால் தளபதி விஜய் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :