திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (19:35 IST)

2020ல் அடுத்தடுத்து வெளியாகும் ரஜினி, அஜித், விஜய் படங்கள்

2019ஆம் ஆண்டு திரைஉலகிற்கு ஒரு சுமாரான ஆண்டாகவே அமைந்தது. மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் மற்ற படங்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்த போதிலும், ஒரு சில படங்கள் மட்டுமே மக்களின் மனதை கவர்ந்தததோடி வசூலிலும் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டும் மாஸ் நடிகர்களின் படங்கள் அதிகம் வெளிவர வாய்ப்பிருக்கிறது. ரஜினியின் இரண்டு படங்களும்., அஜித் மற்றும் விஜய் நடித்த தலா ஒரு படமும் வெளிவர உள்ளதாக தெரிகிறது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ’தர்பார்’ படம் 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விஜய்யின் ’தளபதி 64’ திரைப்படம் வெளிவர அதிக வாய்ப்புள்ளது. இந்தப் படமும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் 2020 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரஜினியின் ’தலைவர் 168’ திரைப்படமும் அஜித்தின் ’வலிமை’ திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலன்று ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்ற நிலையில் அதே போல் மீண்டும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்