புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 31 அக்டோபர் 2020 (11:55 IST)

பெற்றோருக்குக் கொரோனா… ஐபிஎல் வர்ணனையில் இருந்து விலகிய பாவனா!

தனது பெற்றோருக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து தொகுப்பாளினி பாவனா ஐபிஎல் வர்ணனை பிரிவில் இருந்து விலகியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா. இவர் தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான கிரிக்கெட் வர்ணனையும் செய்து வருகிறார். இதற்காக துபாய் சென்ற அவர் பயோ பபிளில் இருந்தார். இப்போது எதிர்பாராதவிதமாக அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஐபிஎல் வர்ணனைக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் ‘கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து எனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். என்னுடைய தாய் தந்தை இருவருக்குமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய அவசியமாகிறது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளார்.