செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 டிசம்பர் 2024 (13:03 IST)

புஷ்பா 2: கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனுக்கு நினைவு திரும்பியது!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இந்த படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஸ்ரீதேஜின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருக்கு மூளைச்சாவு ஏற்படதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது 20 நாட்களுக்குப் பிறகு சிறுவன் ஸ்ரீதேஜுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது சற்றே ஆறுதலான தகவலாக வெளிவந்துள்ளது.