1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான இளநீர் பாயாசம் செய்ய !!

இளநீர் பாயாசம், இரண்டு முறையில் செய்யலாம். இளநீர் பாயாசம் கேரளத்தின் உணவு என்பர். இதை அவர்கள் விரும்பி செய்வார்கள். இது தென்னிந்தியாவில் அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது.
 
தேவையான பொருட்கள்:
 
இளநீர் - 2
கெட்டியான பால் - அரை லிட்டர்
இளநீர் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
முந்திரி - 10
நெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:
 
மெலிதான இளநீர் வழுக்கைகளை துண்டுகள் போடவும். அதில் கால் பங்கு கப் அல்லது பாதி இளநீர் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். இது கடைசியாக சேர்க்க தனியாக வைக்கவும்.
 
இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்தெடுக்கவும். கூடவே இளநீர் விட்டு நன்றாக வழுவழுப்பாக அரைக்கவும்.
 
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அடுப்பை அணைத்து விட்டு நன்கு ஆறியதும், அல்லது இளஞ்சூட்டில் தான் அரைத்த விழுதை சேர்க்கவும், இல்லை என்றால் பால் திரிந்து விடும்.
 
இளஞ்சூட்டில், அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விட்டு உடனே இறக்கவும்.
 
இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து குளிரூட்டி அழகான கிண்ணங்களில் மேலாக சிறிது இளநீர் வழுக்கே துண்டுகள் கூட முந்திரி மேலே தூவி பறிமாறலாம்.