வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

குடும்ப தலைவிகளுக்கு உதவும் சில பயனுள்ள தகவல்கள் !!

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக  இருக்கும்.

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.
 
கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெய்யை அதனுடன் சேர்த்து வேகவைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
 
முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.
 
உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள்  இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.
 
ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்டவேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.
 
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூன்களில் தேயுங்கள்.
 
பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.