சுவை மிகுந்த தேங்காய் பிஸ்கட் செய்ய...!!

Written By Sasikala
Updated: திங்கள், 1 ஜூன் 2020 (17:00 IST)
வெண்ணெய் - 80 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வறுத்த தேங்காய் துருவல் - 25 கிராம்
வெனிலா சுகர் பவுடர் - அரை தேக்கரண்டி
பாதாம் பருப்பு தூள் - 15 கிராம்
உப்பு - சிட்டிகை

செய்முறை: 
 
முதலில் உருக்கிய வெண்ணெய்யுடன் பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பாதாம் பருப்பு தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் சீனி, மைதா மாவு, வெனிலா சுகர்,  உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின் பாலிதின் பையில் போட்டு அரை மணி நேரம் ஃபிரிட்ஜில்  வைக்கவும்.
 
அரை மணி நேரத்திற்கு பின் ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து சமதளத்தில் வைத்து சப்பாத்தி போல் வார்த்து, விரும்பிய அச்சுகள் கொண்டு வெட்டி, எண்ணெய் தடவிய  மெலிதான ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும். பின் 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும்.  சுவையான தேங்காய் பிஸ்கட் தயார்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments