Daily Horoscope
✕

புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் செய்ய வேண்டுமா...!

Updated: செவ்வாய், 3 ஜூலை 2018 (14:55 IST)
இளநீர் மற்றும் வழுக்கைத் துண்டுகள் - ஒரு கப் 
தேங்காய் பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை
முந்திரி - 10
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: 
 
இளநீர் வழுக்கைத் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள இளநீர் வழுக்கைத் துண்டுகளுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் விழுதாக  அரைத்தெடுக்கவும். 
 
அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.  அதனுடன் அரைத்த தேங்காய் வழுக்கை விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு தேங்காய்பால் சேர்த்து கலந்து இறக்கவும். 
 
மேலே அலங்கரிக்க இளநீர் வழுக்கைத் துண்டுகள், முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகலாம். சுவயான புத்துணர்ச்சி தரும் இளநீர் பாயாசம் தயார்.

எல்லாம் காட்டு

ஆபரேஷன் இல்லாம தேஞ்சிபோன மூட்டை சரி பண்ணும் மருத்துவம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

அடுத்த கட்டுரையில்
Show comments