Daily Horoscope
✕

சுவையான வெல்ல அதிரசம் செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 9 அக்டோபர் 2021 (19:05 IST)
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :
 
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ள போதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும்.
 
வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
 
பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும்.
 
ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெயை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். சுவையான இனிப்பு அதிரசம் தயார்.
 
குறிப்பு:
 
மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments