எளிதான முறையில் ருசியான ரவா லட்டு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
ரவை - அரை கிலோ
சர்க்கரை  - அரை கிலோ
நெய் - 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 12
பால் - 250 மில்லி லிட்டர்
 
செய்முறை:
 
முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். 
 
ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல் கிண்டவும். பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். 
 
கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும். சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான ரவா லட்டு தயார்.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments