சூப்பரான சுவையில் ரச மலாய் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பால் - 1.5 லிட்டர்
எலுமிச்சை சாறு - 2 1/2 டீஸ்பூன்
ரவை - 1 tsp
தண்ணீர் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
 
பாதாம் பால் செய்ய:
 
பால் - 1.5 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் பொடி - 1 tsp
குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
பிஸ்தா - சிறிதளவு

செய்முறை:
 
பாத்திரத்தில் தண்ணீர் சேர்க்காமல் பால் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறினால் பால் திரிந்து வரும். பால் நன்குத் திரிந்ததும் அடுப்பை  அனைத்து ஒரு பவுலின் மேல் பருத்தித் துணியை விரித்து அதில் திரிந்த பாலை ஊற்ற வேண்டும்.

பின்னர் அதிலிருக்கும் பால் இறங்கும் அளவு இறுக்கி திரிந்த பால் கட்டியை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
அதில் ரவை சேர்த்து மாவு போல் தண்ணீர் இல்லாமல் பிசைந்துகொள்ள வேண்டும். அதைத் தட்டை வடிவில் தட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். தற்போது 1 லிட்டர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
 
சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் தட்டி வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளை சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். கொதித்ததும், திரிந்த பால் கட்டிகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 
அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து சர்க்கரை, குங்குமப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரைக் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து இறகியதும் ஆறவிடவும் அதில் வெப்பம் தனிந்ததும், தனியாக வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளைச்சேர்க்க வேண்டும். அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் வெளியே எடுத்து பிஸ்தாவை உடைத்து அதன் மேல் தூவி பரிமாறலாம்.

எல்லாம் காட்டு

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments