1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:27 IST)

கோடைக்கேற்ற ஜில்லுனு ஜிகர்தண்டா செய்வது எப்படி....?

Jigarthanda
தேவையான பொருட்கள்:

பால் - 1 கப்
நன்னாரி சிரப் - 3-4 டேபிள்  ஸ்பூன்
பாதாம் பிசின் - 1-2 டேபிள் ஸ்பூன்
சக்கரை - 1/2 கப்
ஐஸ் கிரீம் - 1 கப்
பால்கோவா - 2 டேப்ளேஸ்பூன்



செய்முறை:

பாதாம் பிசினை எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக  ஊறவைக்கணும் . முந்தையநாள் இரவே இதை ஊற வைத்தால் மறுநாள் செய்ய சரியாக இருக்கும்.  இதனை ஊறவைத்தால் ஜெல்லியை போன்ற பாதாம் பிசின் கிடைக்கும். இதுவே இந்த குளிர்பானத்திற்கு முக்கியமான பொருளாகும்.

ஜிகர்தண்டா அதற்கேற்ற சில ஐஸ்கிரீம் வகைகள் உள்ளன. அதை உபயோகிக்கலாம் இல்லாவிட்டால் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஐஸ்க்ரீம்களை உபயோகிக்கலாம்.

ஒரு லிட்டர் பாலை சிம்மில் (அடுப்பை) வைத்து நன்றாக பாலின் அளவு குறையும் அளவிற்கு மெதுவாக காய்ச்சுக்கொள்ளுங்கள். இன்னொரு கிண்ணத்தில் இன்னும் நன்றாக காய்ச்ச ஆடையுடன் இருக்கும் பால் அதாவது பாஸந்தியை போல் உள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக பால்கோவாவையும்  சேர்த்துக்கொள்ளலாம். இப்போது தேவையான பொருட்கள் அனைத்தும் தயாராகிவிட்டது. இதை மேற்கொண்டு ஒரு கிளாஸில் எவ்வாறு சேர்ப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் பாதாம் பிசினை இரண்டு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள். அதற்கு மேல் நன்னாரி சர்பத்தை ஊற்றிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் மற்றும் பாஸந்தியை போல் ஆடையுடன் இருக்கும் பாலை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் நன்றாக காய்ச்சிய பாலை சிறிதளவு ஊற்றி  இதை ஒரு ஸ்பூனால் நன்றாக கிளறிவிட்டு மீண்டும் ஒரு பெரிய ஸ்கூப் ஐஸ் கிரீமை எடுத்து இதற்கு மேல் வைத்துவிடுங்கள். அதன் மேல் நன்னாரி சர்பத்தை சிறிதளவு ஊற்றி விட்டாள் போதும் சுவையான ஜில்லுனு ஜிகர்தண்டா தயார்.