புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

கோதுமை மாவில் கேக் செய்ய வேண்டுமா..?

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1 கப்
ரீபைன்ட் ஆயில் - அரை கப்
முட்டை - 2 
உப்பு - கால் ஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்
பால் - அரை கப்

செய்முறை:
 
கோதுமை மாவு, வெல்லம், எண்ணெய், முட்டை, பேக்கிங் சோடா , உப்பு எல்லாவற்றையும் சேர்ந்து நன்கு மிக்சரில் போட்டு அடித்துக் கொள்ளவும், பிறகு மாவு  பதத்திற்கு ஏற்ப அரை கப் பால் ஊற்றி அடிக்கவும். 
 
கேக் செய்யப் போகிற பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவி ஒரு இரண்டு ஸ்பூன் கோதுமை மாவைப் போட்டு பாத்திரம் முழுவதும் படுமாறு  தட்டிவைத்துக் கொள்ளவும்.
 
பிறகு அடித்து வைத்த மாவை, இட்லி தட்டில் ஊற்றி வைத்துவிட்டு, வேண்டுமென்றால், அடுப்பில் வைக்கவும். சரியாக 45 நிமிடம் முதல் 1 மணி நேரத்திற்குப்  பிறகு சிறு கத்தியை வைத்து கேக்கைக் குத்திப் பார்க்க வேண்டும்.

பின்னர், கத்தியில் ஒட்டாத பதத்தில் கேக் இருந்தால், அடுப்பை நிறுத்திவிட்டு வெளியே  எடுக்கவும். பின்னர், சாக்கோ பவுடர், முந்திர, திராட்சை போன்ற பொருட்களை கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கேக் தயார்.