Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: புதன், 14 ஜூலை 2021 (17:53 IST)
பைனாப்பிள் - 2 கப் (துண்டுகள்)
நெய் - அரை கப்
சர்க்கரை -  2  கப்
தண்ணீர் - 3 1/2 கப்
ஏலக்காய்தூள் - சிறிது
பைனாப்பிள் எசன்ஸ் - சிறிது
முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா - தேவையக்கு

செய்முறை :
 
பைனாப்பிளை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் அதில் ரவையை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்து  தனியே வைக்கவும்.
 
அதே கடாயில் 2  மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
 
பின்னர் கடாயில் தண்ணீர் (3 1/2 கப்) ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் அதில் பைனாப்பிள் துண்டுகள், சிறிது  கேசரி பவுடர் சேர்த்து வேக விடவும்.  வெந்ததும், ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
 
ரவை வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டேயிருக்கவும். அடுத்து அதில் மீதமுள்ள நெய், பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு  கலக்கவும். இறுதியாக வறுத்து, உடைத்து வைத்துள்ள பருப்புகளை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான பைனாப்பிள் கேசரி தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments