Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த ஜாங்கிரி செய்வது எப்படி...?

Written By Sasikala
Published: புதன், 4 ஆகஸ்ட் 2021 (18:18 IST)
அரிசி - 1 தேக்கரண்டி மாவு 
புட் கலர் - 1 சிட்டிகை 
சர்க்கரை - 3 கோப்பை 
ஏலக்காய் - 3 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
 
1 லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை நீரில் ஊறவைத்து நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு வாணலியை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.
 
உளுத்தம்பருப்பை அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ளவேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும். 
 
பின்பு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் காய வைக்க வேண்டும். எண்ணையை அதிக சூட்டில் கொதிக்க வைத்து, அதில் ஜாங்கிரியை பிழிந்தால் ஜாங்கிரி சரியான பக்குவத்தில் வராது. இப்போது முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாக மாவை பிழிய வேண்டும். அதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments