1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 16 மே 2022 (15:53 IST)

சுவையான எள்ளுருண்டை செய்வது எப்படி....?

Ellu Urundai
தேவையான பொருள்கள்:

எள் - 1 கப்
வெல்லத்தூள் - அரை கப்
நெய் - 1 டீஸ்பூன்



செய்முறை:

எள்ளை வாணலியில் சேர்த்து மிதமான தீயில் வாசம் வரும்வரை வறுக்கவும். எள் ஆறியதும், வெல்லத்தூளையும் எள்ளையும் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையை எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்:

தாமிரம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகள் இதில் நிறைந்துள்ளன.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும்.

எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.