Daily Horoscope
✕

காதல் படங்களில் நடிப்பது மனைவிக்குப் பிடிக்காது - கார்த்தி பேட்டி

Written By Sasikala
Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (15:43 IST)
காற்று வெளியிடை படம் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மணிரத்னத்தின் உதவி இயக்குனராக சினிமாவில் காலடி எடுத்து வைத்த கார்த்தி இதில் அவரது நாயகனாகியிருக்கிறார். படம் குறித்த அனுபவங்களை கார்த்தி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

 
காற்று வெளியிடையில் என்ன மாதிரியான வேடம்...?
 
போர் விமானங்களை இயக்கும் விமானியாக காற்று வெளியிடையில் நடித்திருக்கிறேன்.
 
அதற்கான பயிற்சி...?
 
விமானப் படை அதிகாரிகளை சந்தித்து பேசினேன். விமானப் படையில் இருக்கும் என் நண்பர் மூலம் அதே துறையில் உள்ள  சிலரை சந்திக்க முடிந்தது. மணி சார் மூலம் ஒரு விமானப்படை அதிகாரியின் தொடர்பு கிடைத்தது.
 
நாயகி அதிதி...?
 
அதிதி ரொம்ப சின்சியர். தமிழே தெரியாதவராக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.
 
அவரது கதாபாத்திரம்...?
 
படத்தில் அவர் டாக்டராக வருகிறார். இதற்காக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனைக்கு சென்று கண்காணித்துள்ளார்.
 
காதல் படத்தில் நடிப்பதை வீட்டில் மனைவி எப்படி எடுத்துக் கொள்வார்...?
 
தனது கணவர் காதல் கதையில் நடிப்பது எந்த மனைவிக்கும் பிடிக்காது. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ரொமான்ஸ்  செய்வதை அவர்களால் பார்க்க முடியாது. ஆக்ஷன் படங்களில் நடித்தால் அவர்களுக்கு பிடிக்கும்.
 
முதலில் உதவி இயக்குனர்... இப்போது நடிகர்... என்ன வித்தியாசம்?
 
மணிரத்னம் சாரிடம் உதவியாளராக இருந்துவிட்டு அவர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளேன். முதலில் தயக்கமாக இருந்தது.  அதன் பிறகு சவுகரியமாகிவிட்டது. உதவியாளர்களிடம் நடந்து கொள்வது போன்று இல்லாமல் மணி சார் நடிகர்களிடம் ரொம்ப ஸ்வீட்டாக இருப்பார்.

எல்லாம் காட்டு

200 கோடி கடனாளியான ஷாலினி!.. தலை கீழாக மாறிய அஜித்!.. பயில்வான் பேட்டி...

உமாபதியை பிரிந்து வாழும் அர்ஜூன் மகள்!.. இதுதான் காரணம்.. பயில்வான் ரங்கநாதன் பகீர்!..

நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்!.. வைரலாகும் புகைப்படங்கள்..

ரூ.200 கோடி வசூலை நெருங்கும் சீன்!.. 5 நாள் கலெக்சன் அப்டேட்!...

5 நாளில் காலியான வசூல்!.. மூக்குத்தி அம்மன் 2 கலெக்‌ஷன் அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments