1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph

அம்மாவிடம் துடைப்ப கட்டையால் அடி வாங்கிய சாய் பல்லவி - ஏன் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சாய்ப்பல்லவி தாம் தூம் என்ற படத்தின் துணை நடிகை வேடத்தில் நடித்து அறிமுகமானார்.அதன் பின்  பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
 
தொடர்ந்து தமிழில், மாரி-2, கார்கி, என்ஜிகே  உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னனணி நடிகையாக வலம் வருகிறார். எப்போதும் ஹோம்லியாக டீசண்டான நடிப்பை வெளிப்படுத்துவது தான் இவரது தனி அழகு. இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
 
இந்த நிலையில், பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும்போது தன்னுடன் படத்தை மாணவன் ஒருவருக்கு காதல் கடிதம் எழுதி சாய்ப்பல்லவி மாட்டிக்கொண்டுள்ளார். பின்னர் இது அவரது அம்மாவுக்கு தெரியவர துடைப்ப கட்டையால் தர்ம அடிவாங்கியுள்ளார். அதன்பின் அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு வேறு எந்த தவறும் செய்ததில்லையாம்.