அவர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திரமா வச்சிருக்கேன்... அப்போ கீர்த்திக்கு சம்மதமா..?
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். கமர்ஷியல் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு நடிகை சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.
கீர்த்தி சுரேஷின் நடிப்பை அந்தப் படம் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது. மேலும் 2019ம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இதனால், அந்த படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அவர் தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவரது தீவிர ரசிகர் ஒருவர் கிப்ட் கொடுத்தார்.
அந்த கிப்ட்டில் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்துடன் ஒரு காதல் கடிதம் இருந்தது.அதில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த ரசிகர் கூறியிருந்தார்.இந்நிலையில் அந்த காதல் கடிதம் குறித்து கூறிய கீர்த்தி சுரேஷ் நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு இப்படி ஒரு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமில்லாமல் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.